Monday, July 19, 2010

முரண் (கவிதை)

வயதுக்கு வந்த பெண்ணை
விளையாட விட மறுக்கும் மரகதமும்

பெண்கள் சீட்டில் உட்கார்ந்த ஆணை
பேருந்து கேட்க திட்டும் திவ்யாவும்

கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு
50 பவுனும் 5 லட்சமும் வரதட்சனை தந்து
பெண்ணை கட்டிக் கொடுத்த பிரதீபாவும்

வயதுக்கு வந்த பெண்
அப்பாவின் மேல் தொற்றிக் கொண்டால்
திட்டித் தீர்க்கும் திலகாவும்

சளைக்காமல் கேட்கிறார்கள்
பெண்ணுக்கு சமஉரிமை



(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)
 
 
 
.

1 comment:

  1. சம உரிமைனா என்ன என்கிறதையே தப்பா புரிஞ்சுகிறீங்க.. அது தான் ப்ராப்ளேமே

    ReplyDelete