Saturday, July 17, 2010

தற்செயல் (சிறுகதை)

                     
                     டைப்பிஸ்ட் சுலோச்சனா வியர்வையில் நனைந்த தன் மாராப்பு விலகியிருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் நெஞ்சம் படபடக்க.. (எனக்கும் தான்) ஓடிவந்த விதத்தை ரசிக்க முடியாமல் செய்தது, போனில் எனக்கு வந்திருப்பதாய்.. அவள் சொன்ன செய்தி. மேனேஜரிடம் போய் சொல்வதற்குள், அவரே எதிர்பட்டு.. என்னை விரைவாய் வீட்டிற்குக் கிளம்பச் சொன்னார்.

                      நான் பைக்கில் அறுபதை தொடுவதை ஸ்பென்ஸர் சிக்னலின் ‘ரெட்’ தடுத்தது. எரிச்சலாய் திரும்பிய போது, எனது வலதுபுறத்தில் டி-ஷர்ட் போட்டு ‘ஆக்டிவா’வில் ஒரு மாடர்ன் மகாலெட்சுமியும் சிக்னலுக்காய் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தாள். டி-ஷர்ட்டில் ஏதோ வாசகம்.. அனிச்சையாய் அதை வாசிக்க ஆரம்பித்த போது, அவள் தலையிலிருந்த தொப்பி கீழே விழுந்தது. அதை எடுக்கக் குனிந்த போது டி-ஷர்டிலிருந்து பருவம் எட்டிப் பார்த்தது. இது அத்தனையையும் நான் என்னையறியாமல் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும் எதன் மீதோ எரிச்சல் வந்தது. இதற்கு ‘ரெட்’ சிக்னல் போடும் விதமாய் சிக்னலில் ‘கிரீன்’ விழுந்தது. வண்டியை கியருக்கு மாற்றி விரட்டினேன்.

                      எனது வீடு இருக்கும் தெரு முனையை அடைந்து விட்டேன். இந்த வளைவில் திரும்பினால் இடதுபுறம் எட்டாவது என் வீடு. வளைவில் கூட சினிமா போஸ்டர்கள் ஒட்டியிருக்கும். இரண்டு தெரு தள்ளியிருக்கும் ‘அந்த’ மாதிரி படங்கள் போடும் தியேட்டரின் போஸ்டர்கள் கூட இங்கு ஒட்டியிருக்குமே என நினைக்கையிலேயே.. வளைவும் வந்து விட்டது. போஸ்டரில் ஒரு பெண் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு.. குளிக்காமல் உதட்டை கடித்தபடி நின்று கொண்டிருந்தாள். அவளின் காலடியில் ஒருவன் உட்கார்ந்து துண்டை...
                       போஸ்டரை பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. ‘சே.. நாம எதுக்காக போயிட்டிருக்கோம்.. இப்போ போயி..’ என யார் மீதென்றே தெரியாமல் கோபம் வந்தது.

                      கிட்டத்தட்ட வீட்டை நெருங்கி விட்டேன். பைக்கின் வேகத்தை குறைத்து மெதுவாக்கினேன். அப்போது தான்.. அந்த காட்சி, கண்ணில் பட்டது. குட்டை பாவாடை போட்ட கான்வென்ட் பெண் ஒருத்தி சைக்கிளில் என்னைக் கடந்து சென்றாள். அவள் இடது காலை கீழே கொண்டு வந்து வலது காலை மேலே உயர்த்துகையில்...

                     ‘அடச்சீ... என் கண்ணுல தீயத் தான் வைக்கனும்... ’ எப்போ எதைப் பாரக்கனும்னு ஒரு விவஸ்த இல்லாம..’ என என்னை நானே திட்டிக்கொண்டு பார்வையை விலக்குகையில், கண்களில் தூசி விழுந்தது. தூசிக்காக கண்களை மூடிய வேளையில், பைக் லேசாய் தடம்புரண்டது. பைக் நிலை தடுமாறி என் வீட்டு வாசலிலேயே போய் சரிந்து விழ.. கீழே விழப் போன என்னை ஒரு கும்பல் ஓடிவந்து கட்டிக் கொண்டது. அதில் ஒருவர்.. ‘ஓ’வென அழுதபடியே சொன்னார்...

                      ”தம்பி.. அப்பா நம்மள இப்படி தனியே தவிக்க விட்டுட்டு போயிட்டாரேப்பா..”

No comments:

Post a Comment