Saturday, July 17, 2010

வழிதவறியவள் (குட்டிக்கதை)

                    
                        அவள்.. அந்தக் காட்டுப் பாதையில் ஓட்டமும், நடையுமாய் வந்து கொண்டிருந்தாள். அவளைத் தவிர ஆள் நடமாட்டத்திற்கான அறிகுறி ஏதும் இல்லை. தொப்பலாய் நனைந்திருந்த அவள் உடலில் ஆடை என்று எதுவும் இல்லை. உடலில் ஆங்காங்கு ஏதோ கீறிய காயங்கள்.. மெல்ல, மெல்ல இருட்டு அதிகமாகிக் கொண்டே வந்தது. பறவையோ, பூச்சியோ, இன்னும் எதுவெல்லாமோ எழுப்பிய ஒலி.. அவள் பயத்தை அதிகப்படுத்தியது. கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

                     ‘நான் வழி தவறிட்டேனோ? கொஞ்சம் சபலப்பட்டதுக்கு இப்போ கஷ்டப்படுறேன். நான் அங்கிருந்து சீக்கிரமே கிளம்பியிருக்கனும். தப்பு பண்ணிட்டேன். அவர் பாவம்.. என்னைத் தேடிட்டிருப்பார்..’ என மனதிற்குள் புலம்பிக் கொண்டே வந்தவள் முன், பிரம்மாண்டமான ஒரு மரம் தெரிந்தது. அதை பார்த்ததும் சற்று ஆறுதல் அடைந்தவளாய் முகத்தில் லேசான புன்னகையுடன் அதை நோக்கி ஓட ஆரம்பித்தாள். அந்த மரத்தின் ஒரு பெரிய கிளையின் மேல் ஒருவன் உட்கார்ந்திருந்தான். இவளைப் பார்த்ததும் கீழே குதித்தான். ஓடிப்போய் அவனை கட்டிக் கொண்டாள். அவன், இவளைப் பார்த்து..

“ என்ன ஏவாள் குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா?” என்றான்

“வழி தவறிட்டேன் ஆதாம்” என்றாள் அவள்..



.

No comments:

Post a Comment