Friday, July 30, 2010
பெயர் (‘குட்டி’கதை)
கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி என் கண்ணில்பட்டாள். ஓரிரு முறை என்னைப் பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’ என்று முடிவுசெய்தேன்.. பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள்..
“ஹாய்.. ஐ ம் அருண்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினேன்..
“ம்..” என்றாள் கேள்வித் தோரணையில்.
“ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்”
“ அதற்கும் “ம்..” என்றே பதில் தந்தாள்..
“ச்.. தமிழுமா.. ஆப்கா... நாம்..க்யா ஹே..” என்றேன் எனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து...
“ ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா...” எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி...
இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்..
கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. “ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா... மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்... இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?”
இப்போது அவள் மெதுவாய் என்னைப்பார்த்துப் புன்னகைத்தாள்..
“என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்” என்றேன்
“..............”
அப்போது அங்கு வந்த எனது மனைவி காயத்ரி, “ஐயோ.. அருண்.. அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை. பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.
.
(உங்கள் கருத்து மறக்காமல் பதிவு செய்யுங்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல திருப்பம்
ReplyDeleteகுட்டி முக அழகான கதை.
ReplyDeleteபாராட்டுக்கள்.
கதை அருமை.குமுதத்துக்கு அனுப்புனா பிரசுரமாகும்.வாழ்த்துக்கள்
ReplyDeleteகுட்டி மிக அழகான கதை! பாராட்டுக்கள்.
ReplyDeletenice story...smile sat on my lips at the end
ReplyDelete