நான் என் காதலை உன்னிடம் சொல்ல வரும்போதெல்லாம்
ஏதேனும் தடை வரும்
சீரியல் கதையை யாரிடமேனும்
சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருப்பாய்
சில நேரம் சிரித்துக் கொண்டிருப்பாய் அல்லது
அழுது கொண்டு...
தண்ணீர் எடுக்க தனம் வீட்டிற்கு போயிருப்பாய் அல்லது
தள்ளியிருக்கும் உறவுகளை பார்க்க ஊருக்கு போயிருப்பாய்
முகப்பரு வந்ததற்கான வருத்தத்தில் இருப்பாய் அல்லது
மூன்றுநாள் எரிச்சலில் இருப்பாய்
அஷ்டமி, நவமியாய் இருக்கும் அல்லது
தேய்பிறையில் நாட்கள் தேய ஆரம்பித்திருக்கும்
தைரியம் வராமல் சிலநாட்கள் தள்ளிப்போயிருக்கும்
தடையேதும் சொல்லி விடுவாயோ என தவிப்பாயிருக்கும்
இப்படியாய் என் காதல் சொல்ல முடியாமலே போனது... போகிறது
.
பல காதல் அப்படிதான்... அருமை . வாழ்த்துக்கள்
ReplyDelete