ஒரே ஒருமுறை முகம் காட்டு
நினைத்துக் கொண்டிருக்கட்டும் மனம்
எதையேனும் உன் பெயராய் சொல்
உச்சரித்து ஓயட்டும் வாய்
எப்போதும் போல் மௌனம் பேசு
கேட்டு சலிக்கட்டும் காது
நாளொருமுறை என்னைக் கடந்துபோ
உன் வாசம் தேடி சூடாகட்டும் மூச்சு
எதையேனும் விட்டுச் செல்
பத்திரப்படுத்தட்டும் கைகள்
ஏதேனும் வழிசொல்லி வரச்சொல்
நடந்து தேயட்டும் கால்கள்
இதழ் மூடாது புன்னகை செய்
எண்ணி உதிரட்டும் விரல்கள்
எப்போதேனும் சில பார்வைகள் பார்
உருகித் தேயட்டும் உடல்
அடிக்கடி என்னை விட்டு விலகிச் செல்
அதற்கு ‘காதல்’ என்று பெயரி்ட்டு காத்திருக்கிறேன்
.
nice one....
ReplyDeleteheart felt one.
ReplyDelete