“பஸ் ஸ்டாப்பில் நின்று, ஒரு நல்ல ஃபிகர் ஏறும் பஸ்சில் ஏறி அது போற இடம் வரைக்கும் கூடவே போயிட்டு, அங்கிருந்து இன்னொரு நல்ல ஃபிகரைத் துரத்திட்டே வீடு வந்து சேர்ந்திடுவேன்”.
”உங்க ஹாபி என்ன?” என்று எப்.எம்.மிலோ, டி.வியிலோ பாட்டு போடும் ப்ரோகிராமில் கேட்டால் மேற்கண்ட வரிகளைத்தான் பதிலாய் சொல்வேன்
“பனிரெண்டாவது படிக்கிற பையனுக்குள்ள வளர்ச்சியே உன்ட்ட இல்லியேடா”னு நண்பர்கள் கிண்டலாய்ச் சொல்லும் போது, அது எனக்கு பஸ்ஸில் எவ்வளவு வசதியை (!) உண்டு பண்ணித் தருகிறது என்பதை நினைத்து மனதிற்குள்ளேயே சிரித்துக் கொள்வேன்.
ஆனால் இன்றைக்குக் காலை எந்த சொத்தை ஃபிகர் முகத்தில் விழித்தேனோ, ஒரு பெண்ணைக் கூட பஸ்ஸில் பார்க்க முடியவில்லை. எரிச்சலோடு பஸ்ஸின் முன்புற புட்போர்டில் தொங்கிக் கொண்டு வந்த நான் அப்போது தான் இரண்டாவது சீட்டின் ஜன்னலோரமாய் இருந்த அந்த பெண்ணை.. இல்லையில்லை பெண்மணியைப் பார்த்தேன்.
சற்று நேரத்திற்குப்பின் என்னைத் திரும்பிப் பார்த்தவள் முகத்தில் ஏதோ ஒரு மலர்ச்சியை பார்க்க முடிந்தது. எனக்குள் ஏதேதோ கற்பனை ஓடியது.
அடுத்த ஸ்டாப்பில் பஸ் நிற்க, அவளருகி்ல் இருந்தவள் இறங்கிவிட்டாள். வேறு பெண்கள் யாரும் இல்லாது போகவே படியில் நின்ற என்னை அழைத்து உட்காரச் சொன்னாள். ஏதையோ நினைத்துச் சிரித்துக் கொண்டே அருகில் போய் தயங்கி நின்றேன். என் கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.
“உன் பேரென்ன?” என்றாள். சொன்னேன். இன்னும் சில கேள்விகளுக்குப்பின் “உன்னை மாதிரியே எனக்கு ஒரு பையன் இருந்தான். உன்னை விட கொஞ்சம் சி்ன்னப் பையன் அவ்வளவுதான். மத்தபடியெல்லாம் அப்படியே நீதான். இரண்டு மாசத்துக்கு முன்னால் ஸ்கூலுக்கு பஸ்ல போறப்போ ஃபுட்போர்டுலயெல்லாம் தொங்கிட்டுப் போகாதடா கண்ணா.. எனக்காக.. சரியா?” என்றாள் கண்கல் கலங்கி, கனிவாய் தலையை வருடியவாறே..
(குமுதம் வாரஇதழில் வெளியான எனது முதல்கதை)
arumai nanbare.. but remove word verification pls..
ReplyDeleteகண்டிப்பாக.. ‘பொழுதுபோக்கு’.. (பெயரே வித்தியாசமாக உள்ளது)
ReplyDeleteதங்கள் கமெண்ட்க்கு நன்றி.. அடிக்கடி வாருங்கள்..
thalaiva kalakunga.....very nice romba naal munadi itha padicha gyabagam
ReplyDeletenalla kathai..
ReplyDelete