Monday, July 19, 2010

கார்டூன் மனம்

உன் கையில் நானொரு பொம்மை..
வைத்து விளையாடினாய்..
வாரிக் கொண்டு ஓடினாய்..

கனவில் பேசினாய்.. கற்பனை பேசினாய்..
உன் நினைவுகளை என்னோடு அலையவிட்டாய்..

முத்தமிட்டாய்.. கட்டியணைத்தாய்..
கிள்ளிவிட்டு அழவைத்தாய்..
தூக்கி சுமந்தாய்.. தொற்றிக் கொண்டாய்..
ஊட்டி விட்டாய்.. உடன் உறங்கினாய்..

புதிதாய் ஒரு பொம்மை கிடைக்க..
புழக்கடையில் என்னைத் தூக்கி எறிந்தாய்

உன் கையில் நானிருந்தேன்
பொம்மையாய் சில காலம்..

No comments:

Post a Comment