நந்தவனத்தில் அவள் நின்றிருந்தாள்
முன் வந்து முகம் பார்த்தேன்
வேறு திசை திரும்பியபடி யாரெனக் கேட்டாள்
“காதலன்” என்றேன்
புதிதாய் ஒரு பார்வை பார்த்தாள்
பி்ன் வேறெங்கோ கவனம் திருப்பினாள்
“உன்னைக் காதலிக்கிறேன்” என்றேன்
“அப்புறம்” என்றாள் கதை கேட்கும் ஆர்வமாய்
“உனக்கென எதுவும் செய்வேன்”
“என்னென்ன செய்வாய்?”
“கவிதை எழுதுவேன்
கணினி இயக்குவேன்
கலைகள் சில கற்றுள்ளேன்
கடைசிவரை காப்பாற்றுவேன்”
பட்டென பிரகாசமாகிக் கேட்டாள்
“பட்டாம்பூச்சி ஒன்று பிடித்துத் தருவாயா?”
No comments:
Post a Comment