Monday, July 19, 2010

நியூட்டனின் 3ம் விதி (கவிதை)

வீடு திரும்பும் அப்பாவிடம் ஓடிச்சென்று
கழுத்தைக்கட்டிக் கொண்டு
காதுகளி்ல் கிசுகிசுப்பேன்

“பட்டம் ஒன்று வாங்கித்தாயேன்”
“பைசா இல்லை”யென பதில் தந்து
என்னையும் உற்சாகத்தையும்
இறக்கிவிட்டுப் போவார்

கதவுக்குப் பின்நின்று
கனவுகளையும் சுற்றுலாவுக்கான கடைசி நாளையும்
தயங்கியபடி சொல்வேன்

“அடுத்தமுறை பார்த்துக்கலாம்”
அப்போதும் அதே பதிலை அழுத்தமாய் சொல்லிப் போவார்
சைக்கிளுக்கும் சர்க்கஸ்க்கும்
சந்தோஷ சினிமாவுக்கும்
பேனாவுக்கும் கிரிக்கெட்பேட்டிற்கும்
பிறந்தநாள் பரிசுக்கும்
பணமில்லை என்பதை பதிலாய் தந்த அப்பாவுக்கு
இன்று நான் சொல்கிறேன்

“பணம் எவ்வளவு வேணுமோ வாங்கிகோங்க
பார்க்க வரமுடியாது”




"அன்பு நிராகரிக்கப்படும் போது ஏற்படும் வலி நிரந்தரமானவை.. அவை நிலவில் விழுந்த கறையாய்.. வாழ்வின் தனிமை இருட்டின் பொழுதெல்லாம் சற்று பிரகாசமாய் தெரிந்து நம்மை பயமுறுத்தும்..




.

2 comments:

  1. மிக நல்ல கவிதை, அன்றைக்கு அப்பா வறுமையை மறைக்க கண்டிப்புடன் நடந்து கொண்டிருப்பார்...

    ReplyDelete
  2. அப்பா சொல்வார்:

    இன்னும் குழந்தைத்தனம் மாறவில்லை!

    ReplyDelete