“என் நினைவுகள் உன் நினைவின்றி வேறல்ல
என் வழிகள் உன் வழியின்றி வேறல்ல”
துணைக்குத் தனிமை..
அசைபோட அவள் நினைவு..
எனது பேச்சு எப்போதும்
அவள் மௌனத்தைப் பற்றியதே..
“நான் உன்னை மறப்பதில்லை
என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்”
அர்த்தமற்ற சிரிப்புகளின் தொகுப்பாய்..
உளறல் வார்த்தைகளின் அர்த்தமாய்..
காகிதம் நிரப்பும் கவிதைகளின் காரணியாய்..
அவள்
ஏதுமின்றி நான்..
“நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை
உன்னைக் கைவிடுவதும் இல்லை”
என் கல்லறை வாசகமாய்
எழுதிவைத்திடுங்கள் அவள் பெயரை..
எனக்கான நல்ல விளக்கம்
வேறு இருக்க முடியாது
“அழிந்தவையாக புதைக்கப்படுவதெல்லாம்
அழியாதவையாய் எழுந்திரிக்கும்”
காதலும் கூட
புதைக்கப்படுவதில்லை..
விதைக்கப்படுகிறது
.
இரு பார்வைகளும் நன்றே ...
ReplyDelete