‘முத்தம்...’
ஊடலுக்கு முடிவாகவும்..
கூடலுக்கு தொடக்கமாகவும் இருக்கும் இந்த முத்தத்தை அன்பின் வெளிப்பாடாக மட்டும் கொடுத்து வந்தோம்.. அதையே கொஞ்சம் உற்சாகமாய் ‘கிரியேட்டிவாக’ மாற்றினால்.. இன்னும் நன்றாக (வாழ்க்கை)இருக்குமே என்ற யோசனையின் விளைவு தான்.. இந்த ‘கிஸ்-ஓ-தெரப்பி’.. சில புதுமையான, குழந்தைத்தனமான, விளையாட்டுத்தனமான, ஏன் சில கூடலுக்கு தொடக்கமான முத்த முறைகளும் இதில் இடம்பெறப் போகின்றன. நீங்களும் கூட மல்லாந்து படுத்து யோசித்தோ அல்லது செயல்படுத்திக்(!) கொண்டிருப்பதையோ பகிர்ந்து கொள்ளலாம்..
குறிப்பு - இந்த முத்தங்கள், தனது காதலர்களும், கணவன்-மனைவியும் செயல்படுத்தி பார்க்க மட்டுமே.. மற்றவர்களிடம் செயல்படுத்தி பார்ப்பதால் ஏற்படும் பின் (முன்) விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல... ஹி.. ஹி...
Elephant Kiss :
அதென்ன யானை முத்தம்னு மிரள வேண்டாம். முத்தம் கொடுத்துக்க போற ரெண்டு பேரும் எதிரெதிர சின்ன குழந்தைங்கள நாம யானை ஏத்திட்டு போவோமே அந்த மாதிரி போஸ்ல நின்னுக்கங்க. உங்க ரெண்டு பேரோட முகமும் ஒருத்தர ஒருத்தர் பார்க்குற மாதிரி வச்சுகங்க. இப்போ ஒருத்தர் மத்தவங்களுக்கு கொஞ்சம் முன் பக்கமா அசைஞ்சு முத்தம் கொடுங்க.. ‘எங்க முத்தம் கொடுக்கிறது’னு கேக்காதீங்க.. முத்தம்னாலே உதட்டுல கொடுக்கிறது தான். உங்களுக்கு டவுட் இருந்தா உங்க மொபைல எடுத்து 'Write Message'ல Dictionaryய On பண்ணிட்டு Kissனு டைப் பண்ணி பாருங்க... என்ன ஆச்சரியம் Lipsனு வரும். So, ரெண்டு பேரும் லிப்ஸ சேர்த்து வச்சிகிட்டு யானை முட்டுற மாதிரி முன்னயும் பின்னயும் போய், போய் வந்து குடுக்கனும்... ம்... நமக்கு மூச்சு முட்டுதுப்பா... Reference வேணும்னா Five Star (தமிழ்) படத்துல திரு.. திருடா.. பாட்ட பாருங்க..
Book Kiss :
சில வீட்டுல சில சமயம் ஆணோ, பெண்ணோ புத்தகப்புழுவா இருப்பாங்க.. எப்பவும் நியூஸ்பேப்பரையோ, அல்லது கையில கிடைக்கிற புத்தகத்தை எடுத்து வச்சு படிச்சிட்டே இருப்பாங்க.. பார்ட்னர் சமையல் பண்ணுறது, வீட்ட ஒதுங்க வைக்கிறது, துவைக்கிறதுனு ஏதாவது வேலை பார்த்துகிட்டு இருப்பாங்க.. சில சமயம் இரண்டு பேருமே சேர்ந்து வேலை பார்த்துட்டு இருப்பாங்க. அப்படி வேலைபார்க்குற சமயங்கள்ல கொஞ்சம் ரிலாக்ஸா ஆகிக்கிட.. ஆள் இருந்தும் தனியா இருக்கிற மாதிரி பீல் பண்ணாம இருக்க.. வாங்குற முத்தம் தான் புத்தக முத்தம்.. இத வாங்க.. படிச்சிட்டிருக்கிற ஆள்கிட்ட திடீர்னு போய் நில்லுங்க.. அவங்க படிச்சிட்டிருக்கிற புத்தகத்த பிடுங்கியோ.. அல்லது ஏதாவது ஒரு பெரிய புத்தகத்தையோ எடுத்துட்டு போய் அவங்ககிட்ட கொடுத்தோ திறக்க சொல்லுங்க.. அதுல இரட்டை படையில வற்ற பக்கங்கள்ல இரண்டாவதா என்ன நம்பர் இருக்கோ அத்தனை முத்தங்களை கம்பல்சரியா கேட்டு வாங்கிக்கங்க.. (உதாரணத்துக்கு 46 வது பக்கம்னா 6 முத்தம்.. ) அப்புறமா வேலைய கண்டினியூ பண்ணுங்க... ஆனா பார்ட்னரால இனி படிக்கிறத கண்டினியூ பண்ணமுடியுமானு தான் தெரியல...
Speed-O-Meter Kiss :
ஸ்பீடாமீட்டர் கிஸ் என்றதும் பைக்குக்கும் கிஸ்க்கும் என்ன சம்பந்தம்னு உதட்ட சுழிக்க வேண்டாம்... சம்பந்தம் இருக்கு.. இப்போ பெரும்பாலான வீட்டுல கணவனோ மனைவியோ வேலைக்கு போக பைக்க, ஸ்கூட்டரை பயன்படத்துறது வழக்கம். அப்படி களைப்பா வேலைக்கோ.. வெளியவோ போயிட்டு வந்ததும் களைப்ப போக்க கொடுக்கிறது தான் ஸ்பீடாமீட்டர் கி்ஸ்.. இந்த கிஸ் கொடுக்க இரண்டு கன்டிஷன்கள் ஒன்று உங்களிடம் பைக் இருக்க வேண்டும்.. இரண்டு... அதன் ஸ்பீடாமீட்டர் ஓட வேண்டும். வெளியே சென்று வந்ததும்... அதி்ல் ஓடியிருக்கும் எண்களை எல்லாம் கூட்டி (உதாரணத்திற்கு 256891 கி.மீ என்றால் அதை 2+5+6+8+9+1= 31 அதையும் கூட்ட, 3+1 = 4 ) 4 முத்தங்கள் கொடுத்து மனைவியோ, காதலியோ வரவேற்கலாம்... இன்னும் ‘தாங்கு சக்தி’ அதிகம் உள்ளவர்கள் 31 கூட கொடுக்கலாம்...
(முதல்ல ஸ்பீடாமீட்டரை சரிபண்ணனும்னு உங்க மைன்ட் வாய்ஸ் சொல்றது கேட்குது)
(முத்தங்கள் தொடரும்..)
.
முத்தமா போட்டா அடச்சே மொத்தமா போட்டா நல்லாருக்கும்
ReplyDelete