Wednesday, August 4, 2010
பறத்தல் (சிறுகதை)
நடராஜ்க்கு கடந்த ஒரு மாதத்திற்குள் மூன்று, நான்கு முறை இந்த கனவு வந்துவிட்டது. கனவில் அவர் மேலே ஃபேன் ஓடுவதை பார்த்தவாறு படுத்திருக்கிறார். திடீரென தன்னை லேசாய் உணர்கிறார். மெதுவாய்.. காற்றில் எழும்பி மூன்றடி உயரத்தில்... அந்தரத்தில் மிதக்கிறார். பின் வாசல் பக்கமாய் பார்த்து வளைந்து மெது மெதுவாய் கைகளை மேலும் கீழும் அசைத்து பறந்து செல்கிறார். திடுக்கிட்டு கனவு கலைந்து விழித்துப் பார்த்தால் கீழே படுக்கையில் கிடக்கிறார்.
அந்த கனவின் தாக்கமோ என்னவோ நடராஜ் இப்போது உறுதியாக நம்ப ஆரம்பித்து விட்டார்.. தன்னால் நிச்சயம் பறக்க முடியுமென்று. அதுவும் கடைசி முறை தான் கண்டது கனவல்ல நிஜமாகவே பறந்ததாக நம்புகிறார்.
அன்று ஆபிஸிற்கு லீவு போட்டு விட்டு தான் வழக்கமாய் படுக்கும் அதே இடத்தில் தலையணை போர்வை சகிதமாய் படுத்துவிட்டார். வீட்டில் மனைவி மட்டும் தான் இருந்தாள். பிள்ளைகள் ஸ்கூலுக்கு போய்விட்டிருந்தார்கள். ‘இன்று எப்படியும் பறந்தே தீருவது’ என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டார். அறைக்குள் வெளிச்சம் அதிகமாய் இருக்கவே எழுந்து போய் சன்னல்களை மூடி இருட்டை உண்டாக்கினார். மறுபடியும் வந்து இழுத்து மூடி படுத்துக் கொண்டவரை அறையின் கதவு திறக்கும் ஓசை விழித்துப் பார்க்கச் செய்தது. வாசலில் மனைவி நின்றிருந்தாள்.
“உடம்புக்கு ஏதாச்சும் முடியலையா?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல..”
“பிறகு படுத்திருக்கீங்க”
“ உடம்புக்கு முடியலைனாதான் படுக்கனுமா? என்னைய கொஞ்ச நேரத்துக்கு தொந்தரவு பண்ணாத“
அவள் எதுவும் பேசாமல் கதவை மூடிவிட்டு சென்றுவிட்டாள்.
‘கடைசி முறை நான் கண்டிப்பா பறந்தேன்.... பறந்திருப்பேன். கண்டிப்பா ஒரு அடி உயரமாது இருக்கும்.. மிதக்குறேன். அப்போ பார்க்க யாரோ சனியன் மாதிரி வந்து கத்தி எழுப்பி... எழுப்பி இல்ல.. அது.. அத.. எப்படி சொல்லுறது... ஆனா சத்தியமா பறந்தேன். என்னல பறக்க முடியும்.. பறந்திடுவேன்.
குப்புறவாக்கில் படுத்து போர்வையை முழுவதுமாய் போர்த்திக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டார்.
‘இன்னும் கொஞ்ச நேரத்தல் பறந்துவிடலாம்..’
அமைதியாக காத்திருந்தார். சிறிது நேரம் கழிந்தது. எந்த மாற்றமும் இல்லை.
‘இன்னும் ஏன் பறக்க ஆரம்பிக்கவில்லை.?’
புரண்டு படுத்து போர்வையை விலக்கி பார்த்தார்.
‘ஓ.. இது தான் காரணமா? வேற போர்வை இது. அன்னிக்கு நான் போர்த்தியிருந்த போர்வைய எங்க?’ எழுந்தவர் நேராக சமையலறைக்கு வந்தார்.
“லஷ்மி... லஷ்மி...”
“என்ன..?”
“அந்த ப்ளு போர்வைய எங்க?”
“ அதுவா.. அழுக்கா இருக்கேனு துவைக்க எடுத்துப் போட்டிருக்கேன். வேற போர்வை எடுத்து வச்சிருக்கேன் பாருங்க”
“ ஊற வச்சுட்டியா?”
“ இல்ல.. ஊற வைக்க எடுத்துப் போட்டிருக்கேன்”
“எங்க?”
“ அது ரொம்ப அழுக்கு..”
“ எங்....க?”
“ சோபா மேல இருக்கு”
மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தபடி கொதிக்கும் சாம்பாரில் கவனத்தை திருப்பினாள்.
போர்வையொடு வந்தவர் மீண்டும் படுத்து உடலில் ஒரு பாகமும் தெரியாத அளவு போர்த்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டார்.
‘இப்போது பிரச்சனையில்லை.. பறந்து விடலாம்’
சிறிது நேரம் காத்திருந்தார்.
‘ இன்னும் பறக்கலையே.. முதல்ல பறக்கனும்னா தூக்கம் வரணும். அப்போ தான் பறக்க முடியும்னு நினைக்கேன். தூக்கம் வர என்ன செய்யலாம்..? ஒன்னு, ரெண்டு எண்ணுனா தூக்கம் வரும்னு சொல்லுவாங்க. முன்னயெல்லாம்.. மயக்க மருந்து கண்டுபிடிக்கிறதுக்கு முன்னனு நினைக்கேன், ஆஸ்பிடல்ல ஒருத்தன மயக்கத்துக்கு கொண்டு போக அவன சாய்ச்சு படுக்க வச்சு அவனுக்கு முன்னால ஒரு டாலரையோ ஏதோ ஒன்ன செயின்ல கட்டி ஆட்டுவாங்களாம். அப்படி ஆட்டும் போது... அவனை, அதை பார்த்துகிட்டே ஒன்னு, ரெண்டு சொல்லச் சொல்லுவாங்களாம். எல்லாரும் எப்படியும் நூறு எண்ணுறதுக்குள்ள ஏன் அதுக்கு முன்னாலேயே மயக்கமாயிடுவாங்களாம். அது அவங்க அவங்க மனச பொறுத்தது. சிலர் கொஞ்சம் அதிகமாகவும் எண்ணிட்டிருப்பாங்களாம். இப்படித்தான் ஒருத்தன உட்காரவச்சு ஒரு டாக்டர் முன்னால இருந்து செயின ஆட்டிகிட்டே இருந்தாராம். அவன் ஒன்னு, ரெண்டு சொல்லிகிட்டு இருந்தானாம். ரொம்ப நேரம் ஆயிடுச்சாம்.. டாக்டர் தூங்கி போயிட்டார். அவன் எண்ணிக்கிட்டே இருந்தானாம். இருபத்தி மூனு லட்சத்து அறுபத்தாராயிரத்து நானுத்தி எழுபத்தெட்டு.. இருபத்தி மூனு லட்சத்து அறுபத்தாராயிரத்து நானுத்தி எழுபத்தொன்பது.. இருபத்தி மூனு லட்சத்து...’
அவர் உள்ளுக்குள் லேசாய் சிரித்துக் கொண்டார்.
‘சரி இப்போ நாம என்ன செய்யலாம். கடிகார சத்தத்தை கேட்டுகிட்டே இருந்தாலும் தூக்கம் வரும்னு சொல்லுவாங்க. இத செய்யலாம்.. இந்த ரூம்லயே ஒரு வால்கிளாக் இருக்கே.. அது சத்தத்தை கேட்கலாம்.’
காதை கூர்மையாக தீட்டிக் கொண்டு கவனமாகக் கேட்டார். எந்த சப்தமும் இல்லை. லேசாய் கேட்பது போல் இருந்தது. பின் நின்று விட்டது. பின் கேட்டது. இன்னும் கவனமாக கேட்க ஆரம்பித்தவர் காதில் சீறிப் புறப்படும் தீபாவளி ராக்கெட் போல் குக்கரின் விசில் சப்தம் பாய்ந்தது. திடுக்கிட்டு விழித்தார். கோபம் முட்டிக்கொண்டு வந்தது. போர்வையை எடுத்து விசிறியடித்து விட்டு எழுந்து உட்கார்ந்தார். விசில் சத்தம் நிற்கும் வரை காதை இரு கைகளாலும் மூடிக்கொண்டார். நின்றதும் எழுந்து வேகமாய் சமையலறையை நோக்கி நடந்தார். அங்கு அவர் மனைவி இல்லாது போகவே,
“லஷ்மி... லஷ்.......மி” என்று கத்தினார்..
“என்னங்க... என்னாச்சு” என்றபடி கையில் சோப்பு நுரையோடு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்...
“குக்கரை இங்க வச்சுட்டு அங்க என்ன பண்ணுற?”
“ துணிய ஊர வச்சிட்டிருந்தேன். ஏன் என்னாச்சு?”
“ ஏன் இப்படி ஊரை கூட்டுற மாதிரி சத்தம் போடுது?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அடுத்த விசில் அடிக்க ஆரம்பித்தது. மறுபடியும் காதை மூடிக்கொண்டார். விசில் நின்றதும்.. “இதோ.. இப்படி.” என்றார்.
“எப்பவும் போலத் தான் அடிக்குது”
“ எப்பவும் போலத் தான் அடிக்குது. ஆனா.. அத நிறுத்து. எரிச்சலா இருக்கு.”
“ஏன்... இன்னிக்கு உங்களுக்கு என்னாச்சு? காலையில இருந்தே..” அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் இடைமறித்து,
“சும்மா, சும்மா கேள்வி கேட்காத. நிறுத்துனா.. நிறுத்து”
“இன்னும் ஒரு விசில் அடிக்க வேண்டி இருக்கு அடிச்சிரட்டும்”
“அதெல்லாம் முடியாது. இன்னும் ரெண்டு, மூனு மணி நேரத்துக்கு எந்த சத்தமும் கேட்கக் கூடாது அவ்வளவு தான்..” என்றபடியே உள்ளே சென்றவர் மறுபடியும் திரும்பி வந்து, “அப்புறம்.. ஊற வச்சிருக்கிற துணிய ‘டொம்.. டொம்’னு அடிச்சு துவைக்குறேன் பேர்வழினு உயிர வாங்காத.. சத்தம் வரக்கூடாது சொல்லிட்டேன்” என்றபடி திரும்பிச் செல்ல முயல்கையில் அடுத்த விசில் அடிக்க ஆரம்பித்தது. திரும்பிப் பார்த்து முறைத்தார்.
“முடிஞ்சிருச்சு.. முடிஞ்சிருச்சு..” என்று சத்தமாய் சொல்லிவிட்டு ‘என்னாச்சு இன்னிக்கு இந்த மனுஷனுக்கு’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு ஸ்டவ்வை அணைத்தாள்..
வந்து படத்தவருக்கு மனதினுள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். திருப்தி. எவ்வளவு பெரிய காரியத்தை செய்யப் போறோம். இதுவரை யாரும் செய்யாத சாதனைய.. சில ஞானிகள் பறந்ததா சொல்லுவாங்க.. யாரு பாத்திருக்கா..? நான் மட்டும் பறக்க ஆரம்பிச்சுட்டேன்னா என் பேரை வரலாற்றுல எழுதுவாங்க. இந்த மாதிரி.. நடராஜ் என்பவர் தான் மனித குலத்திலேயே முதன் முதலில் பறக்கும் சக்தி பெற்றிருந்தார்னு.. அப்போ இவ பேரை கூட எழுதுவாங்க. இவருக்கு லஷ்மினு அவரை புரிந்து கொள்ளாத ஒரு மனைவி இருந்தாள்னு. இந்த மாதிரி தான் ஐன்ஸ்டீனுக்கு கூட அவர புரிஞ்சுக்காத மனைவி வாய்ச்சுதாம். அவருக்கு மட்டுமில்ல நிறைய புத்திசாலிங்களுக்கு இப்படித்தான். அட அந்த கதையெல்லாம் நமக்கு எதுக்கு நாம ஆக வேண்டிய கதைய பார்ப்போம்.
மறுபடியும் போர்வையையும், கண்களையும் இறுக மூடிக்கொண்ட அப்படியே ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். சிறிது நேரத்தில் லேசாய் தூக்கம் வருவது போல் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். திடீரென அவருக்கு மேலே எழுவதாய் தோன்றியது. அந்தரத்தில் மிதந்தார். போர்வையேதும் விலகவில்லை. ஆனால் அவர் மட்டும் அப்படியே அந்தரத்தில் மிதந்தார். இப்போது அவராலேயே அவரது போர்வை மூடியிருக்கும் உடலை பார்க்க முடிந்தது. அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘கடைசியாய் நான் நினைத்தது நடந்துவிட்டது’ அப்போது சொன்னால் யாரும் நம்பியிருப்பார்களா..? இப்போது நம்பி தான் ஆகவேண்டும்.. ’ இன்னும் கொஞ்சம் மேலே எழும்பி அந்த அறையை ஒரு சுற்று சுற்றி வந்தார். அவருக்கு தனது உடலை ஒரு பஞ்சை விட மென்மையாய் உணர்ந்தார். இனி யார் தடுத்தாலும் நான் பறப்பதை நிறுத்த முடியாது. உடனே தனது மனைவியை கூப்பிட்டு காட்ட வேண்டும் என விரும்பியவர்,
“லஷ்மி.. லஷ்மி.. ” என்றார்
எந்த பதிலும் இல்லை. ‘நாம் ஏன் இங்கிருந்து கத்துவானேன்.. நேரடியாக பறந்து போய் அவள் முன்னால் நிற்கலாம்’ என நினைத்த போது கதவை திறந்து கொண்டு லஷ்மி உள்ளே வந்தாள். மேலே மிதந்து கொண்டிருந்த அவரை அவள் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. மெதுவாய் கீழே இருக்கும் உடலை அங்கங்கு தொட்டுப் பார்த்தாள். இவர் இறங்கி வந்து அவளது எதிரில் போய் நின்றார். அவள் கவனித்த மாதிரி தெரியவில்லை. மறுபடியும் கொஞ்சமாய் “என்னங்க.. என்னங்க..” என்று சொல்லி உடலை அப்படியும் இப்படியுமாய் அசைத்து, மூக்கிலும், நெஞ்சிலும்... கையையும், காதையும் வைத்துப் பார்த்துவிட்டு கதறி அழ ஆரம்பித்தாள்..
“ஐயோ.. என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிட்டீங்களே”
(உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவுசெய்யவும்..)
.
Tuesday, August 3, 2010
ஓஷோவின் 'F**k வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை
கடந்த இரண்டு போஸ்ட்களான ‘அழுகை’, மற்றும் ‘முகம்’ சிறுகதைகளில் கொஞ்சம் ஃபீலிங் ஆன வாசகர்களை ‘குஷி’படுத்தவே இந்த போஸ்ட்.. Enjoy..
ஓஷோ தனது சொற்பொழிவில் எவ்வளவோ விஷயங்களை சொல்லியிருக்கிறார். அதில் ஒரு முறை ஒரு சிஷயர் ”குருவே நீங்கள் பேசும் போது சர்வ சாதாரணமாக ”Fuck" என்ற வார்த்தையை உபயோகிக்கிறீர்கள். அது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று சொல்ல, அதற்கு அவர்.. ”இந்த 'Fuck' என்னும் வார்த்தை மிகவும் அதிசமான, ஆச்சரியமான, அழகான வார்த்தை. இது ஒரே வார்த்தையாக இருந்தாலும் பல இடங்களில், பல அர்த்தங்களை தருகிறது” என்று சொல்லி அது உபயோகிக்கப்படும் இடங்களையும் அதற்கான பொருளையும் சொல்லியிருப்பார்.
அப்படியொரு தெய்வீகமான(?) வார்த்தைக்கு இணையான வார்த்தை தமிழில் இருக்கிறதா என்று பார்த்ததில்.. ஆச்சரியம்.. ஆம் இருக்கிறது. நாமும் அப்படி ஒரு ஈடு இணையற்ற வார்த்தை அதற்கு சற்றும் குறைவில்லாத புகழுடைய வார்த்தை ஒன்றை உபயோகித்து வருகிறோம். அந்த வார்த்தையை உபயோகிக்கும் இடங்களையும், அர்த்தத்தையும் கீழே பகிர்ந்துள்ளேன். வயது வந்தவர்கள் படிக்கவும்.. வராதவர்கள், இதே Blogல் ‘கிஸ்-ஓ-தெரப்பி’ என்ற பகுதி ஒன்று உள்ளது. அதைப்படித்துவிட்டு வரவும். அல்லது வயசுக்கு வந்தபின் படிக்கவும்.
அந்த அதிசய வார்த்தை.. (ஓ)த்தா..
இனி வாக்கியங்களும் அது பயின்றுவரும் இடங்களும்..
திட்டுதல் (கோபப்படுதல்) - உன்கென்ன? ...த்தானு போயிருவ.. நாங்க தான இங்க இருக்கனும்..
அறியாமை - த்தா.. தெரியாம போச்சேடா..
கவலை - இப்படியே நஷ்டத்துல கடைய நடத்துனா.. ...த்தானு போக வேண்டியது தான்.
சண்டையை ஆரம்பித்தல் - த்தா.. அடிச்சிருவியா நீ..
கடினமான தன்மை (தடை) - நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன்.. அசைக்க கூட முடியல.. த்தானு இருக்கு.. எப்படியும் 100 கிலோ இருக்கும்.
தகுதியற்ற நிலை (லாயக்கில்லாத) - அவன்ல்லாம் கத்திய எடுத்துட்டு முன்ன நிக்கான் மாமா... எனக்கு ..த்தானு இருந்துச்சு..
ஏமாற்றம் - 20 கி.மீ. கூட குடுக்காத பைக்க 50 கி.மீ. போகும்னு சொல்லி ..த்தா என்கிட்ட ?ழு ?த்துட்டான்டா..
நம்ப முடியாத நிலை - அவள அங்க வச்சு பார்த்ததும் ..த்தானு ஆயிடுச்சு..
அனுபவித்தல் - மச்சான், நேத்து சில்ரன்ஸ் பார்க்ல வச்சு ஒரு கிஸ் குடுத்தா பாரு.. ...த்தானு இருந்துச்சு..
வேண்டி கேட்டல் - மாப்ள... த்தா.. 500 ரூபா தானடா கேக்கேன்.. குடுறா
பகைமை - நீ ஒண்டிக்கு ஒண்டி வா.. ...த்தா பாத்துறலாம்டா
வாழ்த்துதல் - டே.. புதுமாப்ள.. கோட்டு, சூட்டுல ...த்தானு.. இருக்கடா
பொறுப்பில்லாத தன்மை (அக்கறையில்லாத) - சொன்னத கேக்கலனா என்ன பண்றது. ..த்தானு போக வேண்டியது தான்..
மனச்சங்கடம் (கவலை) - எல்லாத்துக்கும் காசு.. ...த்தானு இருக்கு.. வாழ்க்கையா இது. த்தூ..
புதிய மாறுதல் உண்டாக்கு - என்னவோ தூக்க முடியாதுன்ன ..த்தானு முடிச்சோம்ல
ஆச்சரியப்படுதல் - ஈபில் டவர் மேல ஏறி நின்னு கீழ ஊர பார்க்குறேன்.. ...த்தானு இருக்கு.. யப்பா...!
தமிழ்னா சும்மாவா.. செம்மொழியாயான.. தமிழ்மொழியேயேயேயே....

Monday, August 2, 2010
முகம் (சிறுகதை)
ராமநாதன் உட்கார்ந்திருந்த சோபாவின் எதிரே டிப்பாயில் இருந்த ஹிண்டு பேப்பரை பெயருக்குக்கூட புரட்டவில்லை. டாக்டர் சோலைராஜ் பெயருக்குப் பின்னால் பெயரைவிட பெரிதாய் படித்த டிகிரிகள். மொத்தத்தில் அவர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். அவருக்குச் சொந்தமான க்ளினீக்கில் தான் ராமநாதன் கடந்த 32.. இதோட 33 நிமிடங்களாக இருக்கிறார். மணி மதியம் மூன்றை தொடவிருந்தது. இவருக்கு அடுத்து வந்த ஒருவர், இவரிடம் அனுமதி கேட்காமலேயே இவருக்கு முன் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது அந்த க்ளினிக்கின் உதவியாளர் ராமநாதன் முன் வந்து நின்று தலையைச் சொறிந்து கொண்டே ஆரம்பித்தார்..
“சார் இவங்களுக்கு கொஞ்சம் அர்ஜெண்டா போகனுமாம். குழந்தை வேற வச்சிருக்காங்க. அதுவும் வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கா.. அதான்... அவங்க முதல்ல டாக்டர பாத்துட்டு...” என்று இழுத்தார்.
ஏதோ சொல்லவந்தவர்... “ம்..“ என்றார்.
“தேங்க்ஸ் சார்.. அடுத்து நீங்க தான்” என்றவாரே அவளிடம் சென்றார். ஏதோ அவளிடம் சொல்ல அவள் டாக்டரின் அறைக்குள் சென்றுவிட்டாள். 8 நமிடங்களுக்கு பின்னர் அவள் வெளிவர உதவியாளர் உள்ளே சென்றார்.
“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?” என்றார் டாக்டர்.
“மூனு பேர்..”
“மூனு பேரா” என்றவாரே வெளியே பார்த்தார். கதவிடுக்கின் வழியே ராமநாதன் முகம் தெரிந்தது. என்ன நினைத்தாரோ, “சரி கொஞ்ச நேரம் அவங்க வெயிட் பண்ணட்டும். அடுத்து ஆள் வந்துட்டேதான் இருப்பாங்க. அதுக்குள்ள நான் என்னோட ‘லஞ்ச்’ச முடிச்சிடுறே என்ன?” என்றார் மெலிதாய் சிரித்தவாரே..
ஏதோ சொல்ல வாயெடுத்தவர் ராமநாதன் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு “சரி டாக்டர்” என்றார்.
9 நிமிடத்திற்குப் பின் சாப்பிட்டு முடித்தார் டாக்டர். ராமநாதன் உள்ளே அழைக்கப்பட்டு டாக்டரின் எதிரே உட்கார வைக்கப்பட்டிருந்தார்.
“சொல்லுங்க” என டாக்டர் சொன்னது தான் தாமதம்..
தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூட தோன்றாமல் படபடவென பேச்சை ஆரம்பித்தார்.
“டாக்டர் என்னையப் பார்த்தா எல்லாருக்கும் என்ன தோணுமோ தெரியல. கடையில போய் ஏதாவது வாங்கப் போனா எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியில தான் எனக்குக் கொடுக்குறான். நான் என்னவோ ஓசியில வாங்கற மாதிரி. கோவிலுக்குப் போனா அர்ச்சகர் கூட்டத்துல எனக்கு மட்டும் பிரசாதம் தரமாட்டார். இல்லைனா கொஞ்சமா, அதுவும் கடைசியில ஏதோ வேண்டா வெறுப்பா தருவார். ஆபிஸ்ல ஸ்டாப் யாருக்காவது கல்யாணம், பங்ஷன்னா என்ன கிப்ட் வாங்குறதுனு என்னைய கலந்துக்காமலேயே எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்துடுவாங்க. வீட்டுல என் குழந்தைங்க கூட எதுனாலும் என் வொய்பத் தான் கேட்ட முடிவெடுக்கிறாங்க. என்னைய ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்ல. என் முகத்தை பார்த்தா அவங்களுக்கு என்ன தோணுமோ தெரியல.. இதுக்கு என்ன டாக்டர் காரணம்?” என்றார் உடைந்த குரலில்.
கொஞ்ச நேரத்திற்கு முன் கதவிடுக்கின் வழியே இந்த ராமநாதனின் முகத்தைப் பார்த்த காட்சி டாக்டரின் நினைவுக்கு ஏனோ வந்தது.
.
அழுகை (சிறுகதை)
நான் செத்துட்டேன்கிறத என்னால நம்ப முடியல. ஆனா எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. என்னைய எங்க வீட்டுக்கு முன்னால இருக்கிற திண்ணையில படுக்க வச்சு கால் பெருவிரலை சேர்த்துக் கட்டி, சந்தனம் பூசி, செண்டெல்லாம் தெளிச்சு – இந்த செண்ட் இருக்கே.. மட்டமான வாடை அடிக்கும். செத்தவங்களுக்குனே தனியா விக்கிறாங்க.. விலை கொறைச்சலா. கட்டை பாஸ்கரோட மாமா செத்தப்போ அவருக்கும் கூட இதே செண்ட்தான் போட்டாங்க. ரொம்ப காட்டமா இருக்கும். பத்தி கொளுத்தி, மாலை போட்டு, ஒரு விளக்கும் ஏத்தி வச்சிருக்காங்க.
என்னைய சுத்தி உட்கார்ந்துகிட்டு இந்த பொம்பளைங்க ஏன்தான் இப்படி அழுதுட்டு இருக்காங்களோ தெரியல. அதுலையும் நாலாவது வீட்டுல இருக்கிற கிழவி ஒப்பாரின்ற பேர்ல காது பக்கத்துல வந்து கத்துற கத்து இருக்கே.. நல்லவேளை நான் உயிரோட இல்ல. இல்லைன்னா இந்நேரம் என் காது கிழிஞ்சிருக்கும். ரெண்டு நாளைக்கு முன்னால நான் தெருவுல கிரிக்கெட் விளையாண்டப்போ ‘லெக்’ சைடுல நான் அடிச்ச பந்து நேரா போயி இவ ‘லெக்’ல பட்டிருச்சு. அதுக்கு என்னலாம் திட்டுனா, எப்படியெல்லாம் சண்டை போட்டா.. இப்ப என்னனா.. “ரெண்டு நாளைக்கு முன்ன கூட சிரிச்சு, சிரிச்சு பேசுனானே”னு வாய் கூசாம பொய் சொல்றாளே... ‘ஒப்பாரி வைக்கும் போது கூட உண்மை பேச மாட்டாங்க போல. செத்தவன் எந்திரிச்சு வந்து சொல்ல மாட்டான்ற தைரியம்.’
என் கால்மாட்டுல உட்காந்து அழுதழுது முகம் சிவந்து, வீங்கிப் போயிருந்த அம்மாவ பார்க்க பாவமா இருக்குது. என் மேல அவளுக்கு ரொம்ப பிரியம். நான் எது கேட்டாலும் வாங்கித்தருவா. நேத்து நைட்டுல இருந்து அம்மா பட்டினி. இன்னிக்கு காலையிலேயும் எதுவுமே சாப்பிடல. அவ பாதிநாள் இப்படித்தான் இருக்கா...
எல்லாரும் சாப்பிட்ட பிறகு கடைசியா ஏதோ பேருக்கு சாப்பிடுவா.. நானும் அப்பாவும் இட்லி, தோசைனு சாப்பிட, அவளுக்கு எங்கயிருந்துதான் கிடைக்குமோ பாழாப் போன பழைய சோறு. “எம்மா.. தோசைக்கு கூட கொஞ்சம் போட்டு அரைக்கலாம்ல”னு கேட்டா, “மிஞ்சிப் போனா உங்க அப்பாகிட்ட யாரு வாங்கிக் கட்டிக்கிறது.. அதுவும் போக இவ்வளவு சோத்தையும் தூரவா கொட்டுறது”னு எதிர் கேள்வி கேட்பா. “சரி எனக்கு வை”னு சொன்னா, “ம்கூம்.. வளர்ற பிள்ளை சூடா சாப்பிடனும்”னு மழுப்பிடுவா. இப்போ கூட பாருங்க தேவியக்கா கொடுக்கிற காபிய குடிக்கமாட்டேங்குறா. “அட.. அம்மா அதையாது குடிச்சுத் தொலையேன்.”
அப்பா, வெளிய பெஞ்சில ஒக்காந்திருக்கார். அவர் கண்ணெல்லாம் சிவந்து போயிருந்த்து. ஆனா அது அழுத்துனால வந்த்தில்லனு எனக்குத் தெரியும். பெரிய மாமா தங்கராசு தான் பாடைக்கு சொல்லுறது, மேளத்துக்கு சொல்லுறதுன்னு எல்லா வேலையையும் செஞ்சுகிட்டு இருக்காரு.
வாசப்பக்கம் இருந்த செம்பருத்தி செடிக்கிட்ட வச்சு ஒருத்தரு பாடை கட்டிக்கிட்டு இருக்காரு. அதுல மூனாவது குறுக்கு கம்பை சரியா கட்டாம விட்டுட்டாரு. பாடை கட்டுற மும்மூரத்துல அணைக்காம அவர் தூக்கி எறிஞ்ச பீடிய தங்கராசு மாமாவோட மக கலையரசி கவனிக்காம மிதிச்சுட்டு ‘ஸ்...ஸ்..’னு காலை தூக்கிகிட்டே நொண்டி, நொண்டி நடக்கா.. பாவமா இருக்கு.. இவளும் நானும் சின்ன வயசுல ஒரு தடவை ‘பருப்பு கடைஞ்சு’ விளையாடும் போது, ஒவ்வொரு விரலையும் சோறு, குழம்பு, கூட்டு, அப்பளம்னு சொல்லி ரெண்டு பேரும் சாப்டோம். சாப்ட்ட பிறகு ‘நண்டு வருது, நரி வருது’னு அவ இடுப்புல கிச்சு கிச்சு மூட்டிவிடும் போது அவ பாவாடை அவுந்து விழ.. அவ ‘ஓ’னு அழ.. அவ அழுவுறத பாத்து நானும் அழ... ஒரே சிரிப்பு தான்...
அட, கண்ணாடி சார் கூட என்னை பார்க்க வந்திருக்கார் போல.. அவர் எனக்கு கணக்கு பாடம் எடுக்கிறாரு. ‘கண்ணாடி சார்னு அவருக்கு பேர் வர ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு அவர் கண்ணாடி போட்டிருப்பாரு. இன்னொன்னு.. அவர் எப்ப பாத்தாலும் சட்டை பைக்குள்ள வச்சிருக்கிற சின்ன கண்ணாடி எடுத்து பார்த்து அடிக்கடி தலைய சீவிக்கிட்டே இருப்பாரு. இவரு எத்தனையோ தடவ என்னை முட்டி போட வச்சு கைய தூக்கச் சொல்லிட்டு பின்னாலயே அடிச்சிருக்காரு. அத நினைச்சு பார்த்தா இப்போ கூட லேசா வலிக்கிற மாதிரி இருக்கு. கூடவே தமிழய்யாவும் வந்திருக்காரு. ரெண்டு பேரும் அப்பாட்ட ஏதோ பேசுறாங்க..
“நல்ல பையன் சார். நல்லா படிப்பான். நான் அவன ஸ்கூல் பஸ்ட் வருவான்னு எதிர்பாத்தேன். படிப்பாகட்டும், விளையாட்டாகட்டும் அவன் தான் முதல்ல நிப்பான். நான் கூட சொல்லுவேன்.. “டேய்.. உங்கப்பா ஒரு போஸ்ட்மேனா இருந்து வெயில், மழைனு பார்க்காம அலைஞ்சு, திரிஞ்சு கஷ்டப்பட்டு படிக்க வைக்காரு. அதுக்கு நீ நல்லபடியா படிச்சு ஒரு பெரிய வேலைக்கு போனினா தான் அவர் கஷ்டப்பட்டதுக்கெல்லாம் ஒரு மரியாதை. அவருக்காகவாது படிக்கனும்”னு. அவனும் “சரி”ம்பான். ஆனா இப்ப கொஞ்ச நாளாத்தான்.. ஏனோ இப்படியாகி... இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு யார் நினைச்சா.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.” என்று கண்ணாடி சார் சொன்னத நான் மட்டும் உயிரோட இருக்கும் போது கேட்டிருந்தேன்னா மனசு தூக்கி வாரி போட்டிருக்கும்.
“டேய்.. உங்கப்பா வீடு வீடா போய் லெட்டர் குடுத்தா.. நீ ஊர்ல இருக்கிற பொம்பளை பிள்ளைகளுக்கெல்லாம் போய் குடுக்கிறியா.. அதுவும் லவ் லெட்டரு.. அப்பன் புத்தி அப்படியே இருக்கு”னு திட்டிட்டு எப்படி மாத்தி பேசுறாரு பாத்தீங்களா.. அப்பவும் கூட நான் ஊர்ல இருக்கிற பிள்ளைகளுக்கெல்லாமா குடுத்தேன். லட்சுமிக்கு மட்டும் தான குடுத்தேன். ஓ.. உங்களுக்கு லட்சுமி யாருனு தெரியாதுல்ல..
லட்சுமி பதினொன்னாம் வகுப்புல எங்க ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தா.. என் கிளாஸ் தான். பாக்குறதுக்கு காலண்டர்ல இருக்கிற மகாலட்சுமி மாதிரி இருப்பா. அவ கண்ணை சுருக்கி சிரிக்கிறத பாக்கும் போதெல்லாம் எனக்கு ஸ்டேட் பஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும். உள்ளுக்குள்ள என்னமோ மாதிரி. அத எப்படி சொல்றது... ஆனா ரொம்ப சூப்பரா இருக்கும்.. பென்சில் சீவ ப்ளேடு குடுத்த்துல ஆரம்பிச்ச எங்க ப்ரெண்ட்சிப்பு கடைசியல எனக்குள்ள லவ்வாயிருச்சு.. சினிமா டயலாக் மாதிரியே இருக்குல.. ஆனா இத எனக்கு எப்படி சொல்லனு தெரியல..
ஒரு தடவை அவளோட ரெக்காட்டு நோட்டுல இதயம் படம் வரைஞ்சு தரச்சொன்னா.. நானும் படம் வரைஞ்சு பாகம் குறிச்சு கூடவே ஒரு சின்னத் தாள்ல கவிதைனு சொல்லி ஒரு ஆறு வரி எழுதிக்கொடுத்தேன். அந்த கவிதைய அவ பாக்காம நோட்ட அப்படியே சார்ட்ட நீட்ட... அவர் அதை எடுத்து, யார்க்கு யார் எழுதுனானு கேட்டு கூட்டத்த கூட்டிட்டாரு. எல்லாரும் அவளை கூட்டமா கூடி விசாரிச்சதுல, அவ அழுகுறா.. அது பொறுக்காம நான் தான் எழுதுனேன்னு உண்மைய ஒத்துக்கிட்டேன். அவளுக்கு நாலு திட்டும் எனக்கு பிரம்படியும் கிடைச்சுது. அது பத்தாதுன்னு எங்க அப்பாவையும் வரச்சொல்லி அவர் வந்து வாத்தியார்ட்ட இருந்த பிரம்ப வாங்கி எல்லார் முன்னாலையும் வச்சு அடி அடினு அடிச்சு பெரம்பு உடைஞ்சதும் தான் எல்லார் மனசும் ஆறுச்சு. அந்த பிரம்ப நான் தான் அதுக்கு முந்தின நாள் வாங்கிட்டு வந்திருந்தேன். அதுக்கப்புறம் லெட்சுமி என்கிட்ட பேசவே இல்ல. அவ மட்டுமில்ல எந்த பொண்ணும் என்கிட்ட பேசல. அவகிட்ட எத்தனையோ தடவை பேச போனாலும் ஒன்னு ‘உம்’முனு இருப்பா.. இல்ல அழ ஆரம்பிச்சுருவா.
அப்புறம் ஒருநாள் ஸ்கூல் விட்டு வரும்போது அவள என்கிட்ட பேச சொல்லி நான் கெஞ்சிக்கிட்டு இருந்த்தை எந்த புண்ணியவானோ பார்த்துட்டு போய் என் அப்பாட்ட வத்தி வைச்சுட்டான். அன்னிக்கு எங்கப்பாவுக்கு புதுசா பெல்ட் வாங்கவும், எனக்கு மருந்த வாங்கவுமா ரெட்டைச் செலவு. பிறகு ஒரு வழியா தேறி ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன். ரெண்டு நாள் ஒழுங்கா இருந்த நான் மூனாவது நாள் கிளாஸ் முடிஞ்சதும் அவகிட்ட போய் பேச சொல்லி கெஞ்சலா, கோவமா, அதிகாரமா, அமைதியானு மாத்தி, மாத்தி பேசுனதுல அவ. “என்னைய ஏன் இப்படி தொல்லை பண்ணுற.. உன்னால எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? வீட்டுல எல்லாரும் என்னையத்தான் தப்பா பேசுறாங்க. படிப்பையே நிறுத்திறனும்னு சொன்னாங்க. உன்னால எனக்கு தினம் தினம் எவ்வளவு திட்டு விழுது தெரியுமா..? அப்ப எல்லாம் செத்துறலாம் போல இருக்கு. முன்ன உன்னைய பிடிச்சிருந்துச்சோ இல்லையோ.. இப்போ உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் உண்மையிலேயே நல்லா இருக்கனும்னு நினைச்சீனா இனிமே என் முகத்துலையே முழிக்காத என்கிட்ட பெசாத.. ப்ளீஸ்”னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டா..
எனக்கு அப்போ என்ன தோணுச்சோ... கோவம் தலைக்கு ஏறிப்போச்சு. வேகமா பையில, புக்குக்குள்ள வச்சிரந்த பிளேட தேடிப் புடிச்சு எடுத்து, “நான் உயிரோட இருந்தாத்தான உன்கிட்ட பேசனும்னு சொல்வேன். உனக்கு தொல்லை கொடுப்பேன். நான் செத்தட்டா தோணாதுல.. நீயும் நிம்மதியா இருப்பீல”னு சொல்லிக்கிட்டே, என் கையில பிளேடால கீற ஆரம்பிச்சேன்.. ரத்தம் கொட்டுச்சு.. கண்ணெல்லாம் சொருகுச்சு.. அப்படியே செத்து போயிருவோம்னு தான் நினைச்சேன். முழிச்சு பார்த்தா கையில கட்டோட வீட்டுல இருக்கேன். அதுக்கப்புறம் கிட்டத் தட்ட ஒரு மாசமா ஸ்கூலுக்கே போகல. வேற ஸ்கூலுக்கு போறியானு கேட்டாங்க. முடியாதுனுட்டேன். தெருப் பையங்களோட கிரிக்கெட் விளையாடற அளவுக்கு உடம்பு தேறிடுச்சு. ஆனா லட்சுமி ஞாபகம் அடிக்கடி வரும். கனவுல கூட அவதான் வருவா.. காயம் பட்ட இடத்துல முத்தம் கொடுப்பா.. நீ கிரிக்கெட்ல லாஸ்ட் ஓவர்ல 6 சிக்ஸ் அடிச்சு பாகிஸ்தான ஜெயிச்சுட்டு வா நான் உன்னை கட்டிக்கறேம்பா.. நானும் ஓங்கி, ஓங்கி அடிப்பேன். ஆனா பந்து போகாம பக்கத்துலயே விழும். அம்பயர் எங்க வீட்டு மாட்ட பத்திக்கிட்டே கிரௌண்டுக்கு வந்து அவுட் கொடுப்பாரு. எதிர் டீம் ஜெயிச்சதும் எல்லாரும் எங்க மாட்டுல பால் கறந்து குடிப்பாங்க. இப்படி கண்ணாபின்னான கனவு வரும். இன்னொரு விஷயம் எங்க வீட்டு மாடு.. காளை மாடு. அப்புறம்.. ரெண்டு பேரும் கைகோர்த்து நடந்து போற மாதிரி கனவு வரும். டி.வி பார்க்கும் போது கூட அவதான் வருவா.. நியூஸ் வாசிப்பா, சொல்லப் போனா எங்க பார்த்தாலும் அவதான் தெரிஞ்சா.
ஒருநாள் என்னோட பைக்கட்ட எதுக்கோ எடுத்து துழாவுனப்போ நான் என் நோட்டுக்குள்ள வச்சிருந்த அவளோட காஞ்ச ரோஜாப்பூ, என் பேரு எழுதிக் கொடுத்த நோட்டு, அவ தின்னுட்டு அதுல பொம்மை செஞ்சு தந்த சாக்லேட் தாள். அவ ஓரம் கடிச்ச பேனா மூடி.. இதெல்லாம் பார்க்க.. பார்க்க.. எனக்க அழுகையா வந்துச்சு.. ஏதாவது செய்யனும் போல இருந்துச்சு.
அப்போதான் பரண் மேல தங்கராசு மாமா வயலுக்கு வாங்கி வச்சிருந்த பூச்சி மருந்து கண்ணுல பட்டுச்சு. எடுத்து ஒரே மடக்குல காலி பண்ணிட்டேன். ரொம்ப நேரம் கழிச்சுதான் உள்ள வந்த அம்மா பார்த்துட்டு கத்தி, ஊர் கூடி.. என்னைய ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போனாங்க.. போற வழியில லட்சமியோட முகம் பெரிசா.. தியேட்டர்ல நடிகரோட முகத்தை க்ளோசப்ல காட்டும் போது முத சீட்டுல உட்கார்ந்து பார்த்தா தெரியுமே.. அந்த மாதிரி தெரிஞ்சுது. கண்ணு முழுக்க அவதான் தெரிஞ்சா. அப்புறம் ஒரே இருட்டு. டாக்டர் பார்த்துட்டு எல்லா படத்துலையும் சொல்ற மாதிரி “ஒரு கால்மணி நேரம் முன்னவாச்சும் கொண்டுவந்திருக்கனும்... ம்கூம்..“னு சொல்லிட்டாரு.
என்னைய சுத்தி இப்படி உட்கார்ந்துகிட்டு இப்படி ஒப்பாரி வச்சு அழறது எனக்கு எரிச்சலா இருக்கு. நான் செத்துட்டதுல இவங்களுக்கு வருத்தமோ இல்லையோ.. எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. நான் உயிரா நினைச்ச லட்சுமியே என்னைய பிடிக்கலனு சொல்லிட்டு போனதுக்கப்புறம் நான் யாருக்காக இருக்கனும்? அதுவும் போக நான் செத்த்துல இவங்களுக்கு ஒரு நஷ்டமும் கிடையாது.. என்ன எங்க கிரிக்கெட் டீம்ல எனக்கு பதில் கட்டை பாஸ்கர் விளையாடுவான். க்ளாஸ்ல என் இடத்துல அநேகமா மைதீன் உட்காருவான். அவனுக்கும் லட்சுமி மேல ஒரு கண்ணு. தேவியக்காவுக்கு கடைக்கு போக எனக்கு பதில் எதிர் வீட்டு முருகன் இருக்கான். அப்பாவுக்கு என்னால எந்த தொல்லையும் இல்ல. அம்மா இனிமேலாவது என்னைய பத்தி கவலைப்படாம சுடுசோறு சாப்பிடுவா. லட்சமிய கூட அவ வீட்டுல திட்ட மாட்டாங்க. என்ன நான் இருந்திருந்தா அவள கல்யாணம் பண்ணியிருந்தா அவள ரொம்ப நல்லபடியா பாத்திட்டிருந்திருப்பேன். வேறயாருக்கும் அவள நல்லா பாத்துக்க தெரியாது. அவதான் புரிஞ்சுக்கல.. ம்...நாளைக்கு பேப்பர்ல போட்டாலும் போடுவாங்க..‘காதல் தோல்வி.. மாணவர் தற்கொலை’னு போட்டு ரெண்டு பத்தி எழுதியிருப்பாங்க. போட்டோ கூட போடுறாங்களோ என்னவோ.. அப்படி போட்டா ஹால்டிக்கட்டுக்கு எடுத்த போட்டாவ போட்டா நல்லா இருக்கும். அதுல நான் அழகா இருப்பேன். பேப்பர படிக்கிறவன் கொஞ்ச நேரத்துல மறந்துடுவான். பள்ளிக்கூடத்துல கொஞ்சநாள் ஞாபகம் வச்சிருப்பாங்க. வீட்டுல ஒன்னு, ரெண்டு மாசம் நினைச்சிட்டு அப்புறம் அவங்கவங்க வேலைய பார்க்க போயிடுவாங்க. அவ்வளவு தான்.
இன்னும் என் உடம்ப பார்க்க ஆட்கள் வந்துகிட்டேதான் இருக்குறாங்க. உள் ரூமோட வாசல் கதவுக்கு பக்கத்துல ஏதோ தெரிஞ்ச முகமா பட, யார்னு பார்த்தேன். என் முன் பெஞ்சுல இருக்கிற புவனா.. அப்போ கண்டிப்பா மூர்த்தியும் வந்திருப்பானேனு தேடினேன். பக்கத்துலயே நின்னுட்டிருந்தான். அடுத்து இவன் தான். லேசாய் சிரித்துக் கொண்டேன். உதயராஜ், மோகன், கட்டை பாஸ்கர், லட்சு...மி. அட, லட்சுமி கூட வந்திருக்கா போல.. ஆமா இவ எதுக்கு இங்க வரனும், அதான் பிடிக்கலனு சொல்லிட்டால.. அப்புறம்
ஏன் வந்தா..? ஒருவேளை நான் செத்தது உண்மையானு பார்க்க வந்திருப்பாளோ..? பார்த்தா அப்படி தெரியல. கண்ணுல கண்ணீரா வந்துட்டே இருந்துச்சு.. ஒரு வேளை சாவு வீட்டுக்கு வந்தா அழனும்னு சாஸ்திரத்துக்கு அழறாளோ? ஆனா முகத்தை பார்த்தா இப்போ அழ ஆரம்பிச்சது போல தெரியல.. ரொம்ப நேரமா அழுதழுது முகம் செவக்குற வரைக்கு அழுதுருக்கா.. இன்னமும் கூட ஏங்கி.. ஏங்கி அழுதுட்டே இருக்கா.. ஏன்..? ஏன்..?
அதுக்குள்ள என் உடம்ப தூக்கி பாடையில வைச்சு தூக்கிட்டு போக ஆரம்பிச்சாங்க. எல்லாரோட அழுகையும் அதிகமாச்சு. எல்லாமே எனக்கு செயற்கையா பட்டுச்சு.. அவளும் அம்மாவும் அழுத்து தவிர. அவ வாய் விட்டே அழ ஆரம்பிச்சுட்டா.. மெது.. மெதுவா என்னைய வீட்டக்குள்ள இருந்து வெளிய எடுத்து வந்து ரோட்டுக்கு கொண்டு போக ஆரம்பிச்சாங்க. நாலு பேர் சேர்ந்து பாடைய உசத்தி தோளுக்கு மேல தூக்குனதுல என்னால கீழ பார்க்க முடியல. அவ கூடவே கொஞ்ச தூரம் நடந்து வந்தா.. அவ அழுகைச் சத்தம் எனக்கு கேட்டுகிட்டே வந்தது.. “ஏன் அழுற... அழாத”னு நான் சொல்லிப் பாக்குறேன் அவ காதுல விழவே மாட்டேன்குது. அவ கொஞ்சதூரம் வந்த்தும் மயக்கமாகி விழுறானு கூட இருக்கிறவங்க போடுற சத்தத்துல தெரியுது. ‘கீழ எதுவும் விழுந்துட்டாளா.. அதுக்குள்ள யாராவது புடிச்சுட்டாங்களானு நான் பாக்குறதுக்குள்ள தெருமுனை வந்துருச்சு.. நாங்க வளைஞ்சுட்டோம்.
“லட்சுமி.. லட்சுமி...”

Subscribe to:
Posts (Atom)